ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்!! தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார்.இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், நெல் மூட்டைகள் மழையால் நனையாமல் இருப்பதற்காக ரூ.238 கோடி மதிப்பீட்டில் 2,86,350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 106 இடங்களில் சேமிப்பு கிடங்குகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் 12 வட்ட கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் கொல்லிமலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்க...