Posts

Showing posts with the label #neetexam

நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்வு!

Image
நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்வு! நம் தமிழகம் எங்கும் உள்ள அனைவரும் ஒன்றாக எதிர்ப்பது நீட் நுழைவுத்தேர்வுக்கு தான். இந்தநிலையில் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தபோது அறிவித்திருந்தார்.   இருப்பினும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறுள்ள நிலையில் நீட் தேர்வுக்கு திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடப்பாண்டில் நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் நீட் தேர்வு கட்டணம் ரூபாய் 100 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு 1,500 ரூபாயாக இருந்த பொதுப் பிரிவினருக்கான கட்டணம் நடப்பாண்டில்  1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 800 ரூபாயாக இருந்த தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம் நடப்பாண்டில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வச