எச்சரிக்கை! உங்கள் வங்கிக் கணக்கை நொடிப்பொழுதில் காலி செய்யும் BRATA ட்ரோஜன் மால்வேர்1450654145
எச்சரிக்கை! உங்கள் வங்கிக் கணக்கை நொடிப்பொழுதில் காலி செய்யும் BRATA ட்ரோஜன் மால்வேர் ஹேக்கர்கள் வெவ்வேறு வழிகளில் வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை அனுப்பி மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை காலி செய்கின்றனர். கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்தில் இதுபோன்ற ஹேக்கிங் மால்வேர் மூலம் சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளையடிப்பது தெரியவந்தது. இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். BRATA என்பது ட்ரோஜன் மால்வேர். இது முதன்முதலில் 2019-ல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மால்வேர் மக்களின் ஃபோன் டிஸ்பிளேவை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்துவிடும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது போலியான வாட்ஸ்அப் அப்டேட்டாகவோ மக்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழையும். இந்த மால்வேரால் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது அதே மால்வேரின் புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. BRATA என்பது உங்கள் வங்கி மற்றும் நிதித் தகவல்களைத் திருடும் வைரஸ். உங்கள் தொலைபேசியிலிருந்து தரவை அழிப்பதுடன், ட்ரோஜனின் தடயத்தையும் அழித்துவிடக்கூ...