எச்சரிக்கை! உங்கள் வங்கிக் கணக்கை நொடிப்பொழுதில் காலி செய்யும் BRATA ட்ரோஜன் மால்வேர்1450654145


எச்சரிக்கை! உங்கள் வங்கிக் கணக்கை நொடிப்பொழுதில் காலி செய்யும் BRATA ட்ரோஜன் மால்வேர்


ஹேக்கர்கள் வெவ்வேறு வழிகளில் வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை அனுப்பி மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை காலி செய்கின்றனர். கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்தில் இதுபோன்ற ஹேக்கிங் மால்வேர் மூலம் சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளையடிப்பது தெரியவந்தது. இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். 

BRATA என்பது ட்ரோஜன் மால்வேர். இது முதன்முதலில் 2019-ல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மால்வேர் மக்களின் ஃபோன் டிஸ்பிளேவை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்துவிடும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது போலியான வாட்ஸ்அப் அப்டேட்டாகவோ மக்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழையும். இந்த மால்வேரால் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது அதே மால்வேரின் புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

BRATA என்பது உங்கள் வங்கி மற்றும் நிதித் தகவல்களைத் திருடும் வைரஸ். உங்கள் தொலைபேசியிலிருந்து தரவை அழிப்பதுடன், ட்ரோஜனின் தடயத்தையும் அழித்துவிடக்கூடியது. வங்கி தொடர்பான தகவல்களை அறிந்த நொடியில் பணத்தை திருடிவிடும். இத்தாலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ளீஃபியால் BRATA முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் (APT) பயன்படுத்தி ஹேக்கர்கள் பிராட்டா மால்வேர் மூலம் கைவரிசையை அரங்கேற்றுகின்றனர். 

Clifi படி, BRATA-வின் அப்டேட் மால்வேர், இங்கிலாந்து, போலந்து, இத்தாலி மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு பரவியுள்ளது. 

BRATA கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலி. அதனை பதிவிறக்கம் செய்து டவுன்லோடு செய்யும்வரை உங்களுக்கு எந்த எச்சரிக்கையும் காட்டாது. ஸ்மார்ட்போனில் நிறுவியபிறகு, டிரோஜன் மால்வேர் தன்னுடைய வேலையை ஆரம்பிக்கும். ஸ்மார்போனில் நீங்கள் அனுமதியெல்லாம் கொடுத்த பிறகு வங்கிச் சான்றுகளை நகலெடுத்து ஹேக்கர்களுக்கு அனுப்புகிறது. இதற்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கு ஹேக்கர்களால் காலியாக்கப்பட்டுவிடும்.

மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து எந்த செயலியையும் பதிவிறக்க வேண்டாம்.எந்த செய்தியிலிருக்கும் லிங்கையும் திறக்க வேண்டாம். கொடுக்கப்பட்ட இணைப்பிலிருந்து எந்தவொரு செயலியையும் நிறுவுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களைக் கேட்பதில்லை. வைரஸ்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிமால்வேர் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

2019 New Air Jordan 1 UNC Patent Leather Shoes To Buy #Leather