பாகுபலி 3 வருமா?வராதா?...ராஜமெளலி என்ன சொல்கிறார் தெரியுமா? பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து அனிமேடட் நெட்ஃபிளிக்ஸ், கிளாஃபிக்ஸ் நாவல் சீரிஸ், லைவ் ஆக்ஷன் வெப் சீரிஸ் என பல வடிவங்களிலும் பாகுபலி உருவாக்கப்பட்டது. பாகுபலியின் தொடர்ச்சியாக ஓடிடி தொடராக ரைசிஸ் ஆஃப் சிவகாமி உள்ளிட்ட பல கதைகளை இயக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பிறகு அவை பாதியிலேயே கை விடப்பட்டது. இதனால் பாகுபலியின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். பாகுபலி 3 எடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பாகுபலி தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் இதுவரை தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர். ஆனால் பாகுபலியின் அடுத்த பாகத்தை ராஜமெளலி இயக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இது பற்றி சமீபத்தில் பேட்டி அளித்த ராஜமெளலியிடமே கேட்கப்பட்டது. பாகுபலி 3 வருமா என கேட்டதற்கு பதிலளித்த ராஜமெளலி, பாகுபலியின் மற்றொரு பகுதியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அதற்காக தயாரிப்பாளர் ஷோபுயார்லகட்டாவுடன் ஆலோசித்து, அதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்ந்து வருகிறேன். பாகுபலியை சுற்றி பல விஷய...