பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை டெல்லியில் பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பருத்தி விலை உயர்வு மற்றும் நூல் விலை உயர்வு ஆகியவை தங்கள் வணிகத்தை கடுமையாக பாதித்ததைத் தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை உச்ச அளவில் அதிகரிக்க முடிவு செய்தது. சங்க உறுப்பினர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பருத்தி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை, நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை அல்லது உள்நாட்டு தொழில்களுக்கு தேவையான நூல் விநியோகத்தை உறுதி செய்ய அளவுத்திருத்த சூத்திரம் போன்ற முக்கிய கோரிக்கைகளை எழுப்பினர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சரக்கு வர்த்தகப் பட்டியல் மற்றும் பருத்தியை பட்டியலிடுதல். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியதாவது: கடந்த 18 மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நூல் விலை, 200 ரூபாயாக இருந்த...
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா? சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ போலீசார் கைது செய்தது. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவ...
ஆடு, மாடு பிடிக்கணும்... சைக்கிள் ஓட்டணும்... இன்டர்வியூவுக்கு தயாராக வந்த பட்டதாரிகள் ’கால் காசு சம்பளம் என்றாலும் அது சர்க்கார் சம்பளம்’என்பார்கள். காலப்போக்கில் அதன் நிலைமை மாறிக்கொண்டே போக, படிப்புக்கேற்ற வேலையைவிடக் கிடைத்த வேலையை செய்யும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தகுதியான இந்த வேலைக்கு குமரி மாவட்டத்தில் 5906 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது. இதில் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்களுக்கு இணையாக பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டது ஆச்சரியத்தையும், வேலையின்மையின் மீதான கள யதார்த்தத்தையும் உணரவைத்துள்ளது. காலியாக உள்ள 48 பணியிடங்களுக்கு நேற்றுமுதல் பத்துநாள்கள் நேர்முகத்தேர்வு நடக்கிறது. இதில் விண்ணபித்துள்ள 5906 பேருக்கும் சரியாக சைக்கிள் ஓட்டத் தெரிகிறதா? மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளைச் சரியாகக் கையாளத் தெரிகிறதா? என்பது உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்களின் திறனை அதிகாரிகள் மதிப்பீடு செய்து மதிப்ப...
Comments
Post a Comment