தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!1113129302


தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!


தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் சில பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி சமூக பாதுகாப்புத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை போக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாபெரும் ஆதரவு, இத்திட்டத்தை வெற்றி திட்டமாக மாற்றியுள்ளது.

மேலும் 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் 4.80 லட்சம் பேர் என்ற இலக்கு தாண்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.9.83 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பள்ளி மாணவர்கள் நலனுக்காக பாரபட்சம் பார்க்காமல், தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக்கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

எனவே மாணவர்களின் நலனை கருதி, ஜாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் எந்த ஒரு கயிறும் கையில் கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை, மாணவர்களுக்கு பிறந்த நாளாக இருந்தாலும் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments