ரேஷன் கடைகளில் ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு!1773284482


ரேஷன் கடைகளில் ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு!


 

அறிவிப்பு

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

 

இன்ப அதிர்ச்சி

இந்நிலையில், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்து, இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.. அதாவது, காதி பொருட்கள், பனைவெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிவிப்பில் ஒருசில நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது.

 

ரேஷன் கடைகள்

அதன்படி, சென்னையில் உள்ள நியாயவிலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், கிராமப்புறங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஊக்கத்தொகை

மேலும், நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அம்மாதம் வழங்கப்பட வேண்டிய விற்பனை தொகையில் இருந்து ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது, ஊழியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்து வருகிறது.

Comments

Popular posts from this blog