இந்தியாவில் தீவிரமாகும் பன்றிக்காய்ச்சல் !! 300 பன்றிகளை கொல்ல உத்தரவு!!2019364135


இந்தியாவில் தீவிரமாகும் பன்றிக்காய்ச்சல் !! 300 பன்றிகளை கொல்ல உத்தரவு!!


ஆப்பிரிக்காவில் நாடு முழுவதும் தீவிரமாக பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இதன்  பாதிப்பு மெல்ல தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் இரு பன்றி பண்ணைகளில் இந்த பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த பண்ணைகளில் வளர்த்து வரும்  பன்றிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

 

இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய விலங்குகள் நோய் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.  இதன் முடிவில் இந்த 2 பண்ணை பன்றிகளுக்கு ஆப்ரிக்கா பன்றி காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மாநில விலங்குகள் நலத்துறை விடுத்த செய்திக்குறிப்பில் பரிசோதனை முடிவில் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  நோய் பரவலை தடுக்க பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொல்ல உத்தரவிடப்பட்டது. 


இதன் பாதிப்பு மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் அரசு விழிப்புணர்வுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே பீகார், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின்  பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்த ஆப்ரிக்கா  பன்றி காய்ச்சல் பாதிப்பு மிக வேகமாக பரவக் கூடிய இந்த தொற்று விலங்களின் உயிரை விரைவாக பறிக்கும் தன்மை கொண்டது.


அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும்  ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக 40,482 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அமைச்சர்  தெரிவித்துள்ளார். பண்ணையில் ஒரு பன்றிக்கு இந்த பாதிப்பு வந்தாலும் பரவலை கவனித்து தடுக்காவிட்டால் விரைவில் அனைத்து பன்றிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog