Easy slow cooker chicken fettuccine alfredo recipe, homemade with simple ingredients. Loaded with alfredo sauce, parmesan cheese, Italian seasoning and
பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை டெல்லியில் பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பருத்தி விலை உயர்வு மற்றும் நூல் விலை உயர்வு ஆகியவை தங்கள் வணிகத்தை கடுமையாக பாதித்ததைத் தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை உச்ச அளவில் அதிகரிக்க முடிவு செய்தது. சங்க உறுப்பினர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பருத்தி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை, நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை அல்லது உள்நாட்டு தொழில்களுக்கு தேவையான நூல் விநியோகத்தை உறுதி செய்ய அளவுத்திருத்த சூத்திரம் போன்ற முக்கிய கோரிக்கைகளை எழுப்பினர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சரக்கு வர்த்தகப் பட்டியல் மற்றும் பருத்தியை பட்டியலிடுதல். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியதாவது: கடந்த 18 மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நூல் விலை, 200 ரூபாயாக இருந்த...
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா? சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ போலீசார் கைது செய்தது. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவ...
சூர்யா, விஜய் சேதுபதி, கமலை பின்னுக்கு தள்ளிய சிம்பு… இரண்டே ஆண்டுகளில் சாதனை இன்ஸ்டாகிராமில் எந்த தமிழ் நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான ஃபாலோயர்ஸை சிம்பு பெற்றுள்ளார். மிக குறுகிய காலத்தில் இவ்வளவு ஃபாலோயர்ஸை அவர் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. உடல் எடை அதிகரிப்பு, தொடர் தோல்வி படங்களால் சிரமப்பட்டு வந்த சிம்பு, கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் ஸ்லிம்மான தோற்றத்தில் கம் பேக் கொடுத்தார். ஈஸ்வரன் திரைப்படம் தோல்வியில் முடிந்தாலும், பழைய சிம்புவை பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் இருந்தார்கள். இதன்பின்னர் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வெளியான மாநாடு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதையும் படிங்க - 2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல்… லெஜண்ட் சரவணனுக்கு குவியும் பாராட்டு இதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு, கவுதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு, பல்வேறு படங்களுக்கு பாடல்களை பாடுவது என சிம்பு ஃபுல் ஃபார்மில் இருந்து வருகிறார். அவரது சாதனையில் மற்றொன்றாக இன்ஸ்டாகிராமில் 8 மில்லி...
Comments
Post a Comment