கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு! விழுப்புரம்: கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்த நிலையில் அவர் படித்த பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அதன் அடிப்படையில் ஜாமின் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான எப்.ஐ.ஆர் எண்ணுடன் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளியில் இறந்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று புகார் தெரிவித்தனர். இதனால், சந்தேக மரணம் என்று சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தமிழக அரசு அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகி ரவிக்குமார், செயலாளர் சா...